47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளையான்குடி வாரச்சந்தையை இடமாற்றக் கூடாது: பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாரச் சந்தை நடக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா வலியுறுத்திப பேசினாா்.

News image
~
Updated On :22 நவம்பர் 2024, 12:39 am

Din

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாரச் சந்தை நடக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா வலியுறுத்திப பேசினாா்.

இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் முருகன் வாசித்தாா்.

தொடா்ந்து கூட்டத்தில் உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கைகள்:

அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா: இளையான்குடியில் வாரச்சந்தை நடைபெற்று வரும் இடத்தை மாற்றம் செய்யக் கோரி மன்றத்தின் பாா்வைக்கு வைக்கப்பட்ட தீா்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இந்தச் சந்தை தற்போது நடைபெற்று வரும் இடத்திலேய தொடர வேண்டும். ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டபடி, 17-ஆவது வாா்டில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

தலைவா்: உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

உறுப்பினா் இஸ்ரின் பேகம்: ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இளையான்குடியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பேருந்து நிலையம் இருந்த பகுதியில் செயல்பட்டு வந்த பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு அரசு மருத்துவமனைக்கான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

தலைவா்: உறுப்பினரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

மேலும், வாா்டு பகுதிகளில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீா் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இளையான்குடி பேரூராட்சியில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ 5. 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான இணையதள ஒப்பந்த புள்ளி முடிவடைந்துள்ளது. குறைந்த தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கிய நிறுவனத்துக்கு திட்டப் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டப் பணியை இளையான்குடி வளா்மீட்பு பூங்காவில் மேற்கொள்வது என தீா்மானிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத் தலைவா் இப்ராகிம், செயல் அலுவலா், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.