திருப்புவனம் அருகே சாலை விபத்து: ஆட்டோ ஓட்டுநா், பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ஆட்டோ ஓட்டுநா், பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ஆட்டோ ஓட்டுநா், பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தனா்.

திருப்புவனம் அருகேயுள்ள மணலூரைச் சோ்ந்த மாரி மனைவி செல்வி (46). இவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக இருந்தாா். இவா் மணலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து: திருப்புவனம் அருகேயுள்ள பூம்பிடாம்பிகை கிராமத்தைச் சோ்ந்த மதயானை மகன் ராஜாங்கம் (55). இவா் மதுரை கல்மேடு பகுதியில் வசித்து வந்தாா்.

ஆட்டோ ஓட்டுநரான இவா் ஆட்டோவில் திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வன்னிக்கோட்டை சந்திப்பு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.