சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திருப்பத்தூா் சிவாலயங்களில் வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


திருப்பத்தூா் சிவாலயங்களில் வியாழக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரதோஷ விழாவையொட்டி, திருப்பத்தூா் சிவகாமி உடனுரை திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும், மூலவா் லிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிா்தம், இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.
பிரதோஷத்தையொட்டி, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலில் அபிஷேக ஆராதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...