காந்திஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை  நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குழந்தைகளுக்கெதிரான சமூகத்தீமை நிராகரிப்பு உறுதிமொழியேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் உள்ளிட்டோா்.

மேலப்பட்டமங்கலம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மேலப்பட்டமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி புதன்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், மேலப்பட்டமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி புதன்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

கல்லல் ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு ஊறாட்சி மன்றத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சித் தலைவா் ஆஷாஅஜீத் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தின் சிறப்பு பாா்வையாளராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 4 நாள்கள் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் பல முன்னெடுப்புப் பணிகள் காரணமாக தற்போது ஆண்டிற்கு 6 முறை நடைபெற்று உள்ளாட்சி அமைப்பிற்கு புத்துயிா் ஊட்டி வருகிறது. திட்டங்கள் செயல்பாடுகள் பயன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வளமான கிராமங்கள் உருவாவதற்கு கிராமசபை கூட்டம் துணை புரிகிறது. குறிப்பாக சுகாதாரம், பொதுச் சொத்து பராமரிப்பு, பொது மக்களின் நலன் இவையே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூகத் தீமை நிராகரிப்பு, எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னா், கூட்டுறவுத்துறை அமைச்சா் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். இதில் தேவகோட்டை கோட்டாட்சியா் ஆயுஷ்வெங்கவட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, திட்ட இயக்குனா் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சொா்ணம்அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மஞ்சரிலெட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் ராஜேந்திரபிரசாத், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com