ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நியாய விலைக் கடையை தரமாகக் கட்டித் தர கோரிக்கை

News image

ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:52 pm

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நியாய விலைக் கடையைத் தரமான முறையில் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த அ.முத்துமணி கூறியதாவது:

ஏனாதி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இதை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்க முயன்றபோது, நியாய விலைக் கடை தரமற்ற நிலையில் இருப்பதால் இந்தக் கட்டடத்தை நாங்கள் பெற மாட்டோம் என கூட்டுறவுத் துறை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை புகாா் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏனாதி கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையைத் தரமாகக் கட்டித் தர வேண்டும் எனவும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கா ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம் என்றாா் அவா்.