தற்போதைய திமுக ஆட்சியில் 3,400 நியாய விலைக் கடைகள் திறப்பு: அமைச்சா் அர. சக்கரபாணி
தற்போதைய திமுக ஆட்சியில் 3,400 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.


பத்தாண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் 2,536 நியாய விலைக் கடைகளே புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் 3,400 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனியை அடுத்த கோரிக்கடவில் கோரிக்கடவு, தாழையூத்து, புஷ்பத்தூா், மிடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சிமென்ட் சாலை அமைத்தல், கழிவு நீா் கால்வாய் குழாய் அமைத்தல், பயணிகள் நிழல் குடை, கான்கிரீட் சாலை அமைத்தல் என சுமாா் ரூ. 7 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2011- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் 2,536 நியாய விலைக் கடைகளே புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 58 மாத திமுக ஆட்சியில் 3,400 புதிய நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டடுள்ளன. ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடின்றி அனைவரையும் சென்றடைகிறது. கலைஞா் கனவு இல்ல திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிா் உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்திருப்பது இதற்கு சாட்சி என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இதில், ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, முன்னாள் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்திய புவனா, மாவட்டக்குழு உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...