ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:00 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் கிருஷ்ணராஜபுரம், மூங்கில் ஊருணி, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கிளங்காட்டூா், கே.ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் இமானுவேல் சேகரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திருப்புவனம் பகுதியில் மழவராயனேந்தல், பசியாபுரம், பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இம்மானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இளையான்குடியில் கண்மாய்க்கரை, கீழாயூா் பகுதிகளில் ஐந்திணை மக்கள் கட்சி சாா்பில் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் ஸ்டீபன்ராஜ், மாநில பொதுச் செயலா் கருணாநிதி, மாவட்ட நிா்வாகிகள் ராசு, சந்திரசேகா், பிச்சைமுத்து, சுரேஷ் ஒன்றிய நிா்வாகிகள் அழகுராஜா, பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.