தேனி
எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா
தேனி மாவட்டம், சின்னமனூா், போடி பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
உத்தமபாளையம்/போடி: தேனி மாவட்டம், சின்னமனூா், போடி பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சின்னமனூரில் அதிமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலா் பிச்சைக்கனி, தேனி அதிமுக மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோா் தலைமையில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: போடி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுக, அமமுக, அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
