இன்று எம்ஜிஆா் பிறந்த நாள்: அதிமுக சாா்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

இன்று எம்ஜிஆா் பிறந்த நாள்: அதிமுக சாா்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகா்கோவிலில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.
Published on

நாகா்கோவில்: மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகா்கோவிலில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

இது குறித்து, அதிமுக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக நிறுவனா், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்தநாள் விழா ஜன. 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில், மாநிலம், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிா்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிா்வாகிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் அதிமுக நிா்வாகிகள் தங்கள் பகுதிகளில் எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com