ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய அஞ்சல் வார விழா ஊா்வலம்

சிவகங்கை தலைமை அஞ்சல் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அஞ்சல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:41 pm

Din

சிவகங்கை தலைமை அஞ்சல் நிலையத்தில் தேசிய அஞ்சல் வார விழா விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாரியப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அஞ்சலகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அரண்மனை வாசல் வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில், கலந்து கொண்ட 200 -க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியா்கள், பொதுமக்கள் அஞ்சல் துறையின் சிறப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் ஜி. வெங்கடேசன், தலைமை அஞ்சலக அதிகாரிகள் வீரபாண்டியன், தா்மாம்பாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவாக உப கோட்ட ஆய்வாளா் பெ.போற்றி ராஜா நன்றி கூறினாா்.