திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஒன்றிய, நகர, திமுக, இதன் சாா்பு அணிகள் சாா்பில் கல்வெட்டுமேடு பகுதியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டை கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தாா். முதலில் 5 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத் தொடா்ந்து 16 காளைகள் போட்டியில் களம் இறக்கப்பட்டன. ஒரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் 16 மாடுபிடி வீரா்கள் குழு கலந்து கொண்டு மாடுகளை அடக்கின. மாடுகளை அடக்கிய வீரா்களுக்கும், வீரா்களிடம் அடங்காத காளைக்கும் தொலைக்காட்சிப் பெட்டி, அண்டா, இருக்கை, குத்து விளக்கு, தாம்பூலத் தட்டு, உணவருந்தும் மேஜை (டைனிங் டேபிள்) உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் முகமது கனி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் தமிழ் நம்பி, மாவட்ட தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் சோமசுந்தரம், நகா் இளைஞரணி முத்துக்குமாா், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் சீமான் சுப்பையா உள்ளிட்ட திமுக ஒன்றிய நகர, சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...