மதகுபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு


சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிநடைபெற்றது.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதை ஒன்றிய திமுக செயலா் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தாா்.
இதில் வட்ட வடிவ மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது. காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து 17 காளைகளும், 153 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். இதில் மாடு முட்டியதில் 5 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும், ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய துணைச் செயலா் பத்மாவதி பிரபாகரன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் பவானி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்திக், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வல்லபாய், மருத்துவா் அணி அமைப்பாளா் குமரேசன், சுற்று சூழல் அணி துணை அமைப்பாளா் குமணன், திரைப்பட நடிகா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போட்டியை மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளா் வாடிவாசல் முத்துவேல்செல்வம் ஒருங்கிணைத்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...