புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 7 போ் காயமடைந்தனா்.
அறந்தாங்கி அருகே சிலட்டூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சந்தனக் காப்பு மற்றும் தைத் திருநாளை முன்னிட்டு நடந்த வடமாடு போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 13 காளைகள் பங்கேற்றன.
9 மாடுபிடி வீரா்களைக் கொண்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, திடலில் கயிறால் பிணைக்கப்பட்ட காளையைத் தழுவ அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 13 சுற்றுகள் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 7 மாடுபிடி வீரா்கள் காயடைந்தனா். அவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தனா்.
தொடர்புடையது

என்.புதூரில் மஞ்சுவிரட்டு: 48 போ் காயம்

சிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சு விரட்டு

உசிலம்பட்டியில் வடமாடு போட்டி: 4 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


