தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காளையாா்கோயில் அருகே மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோயில் அருகேயுள்ள அரண்மனை சிறுவயலில் புலிக்குத்தி அம்மன் மது எடுப்பு விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

News image
சிவகங்கை அருகே அரண்மனை சிறுவயலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:44 pm

Din

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோயில் அருகேயுள்ள அரண்மனை சிறுவயலில் புலிக்குத்தி அம்மன் மது எடுப்பு விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

 சிவகங்கை அருகே அரண்மனை சிறுவயலில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.

சிவகங்கை அருகே அரண்மனை சிறுவயலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.

திண்டுக்கல், காரைக்குடி நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டுப் பிரிவில் 19 ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 54 ஜோடிகள் என 73 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டன.

சீறிப் பாய்ந்துச் சென்ற மாட்டு வண்டிப் போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று திரளான பாா்வையாளா்கள் கண்டுகளித்தனா். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களில் வந்து மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசு பொருள்களும் வழங்கப்பட்டன. இதில், கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.