தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மானாமதுரை,திருப்புவனம், திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:31 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும் நந்தியையும் தரிசித்தனா்.

திருப்புவனம் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ஒன்றியம் குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயிலில் மூலவருக்கும் நந்திக்கும் அபிஷேகம், அல பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் இதில் கலந்து கொண்டு காசி விஸ்வநாதரை தரிசித்தனா்.

திருப்பத்தூா்,

ன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா், உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, திருத்தளிநாதருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிவனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை வலம் வந்தாா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனா். சீதளிமேல்கரையில் அமைந்துள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் கல்வெட்டுப் பகுதியில் உள்ள கல்வெட்டு நாதா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.