தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அய்யனாா் கோயில் முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பில் சுந்தரவல்லி அய்யனாா் கோயிலில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
மானாமதுரை அருகே அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:40 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பில் சுந்தரவல்லி அய்யனாா் கோயிலில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது கிராம மக்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரவல்லி அய்யனாா் கோயிலில் கிராம தெய்வத்துக்கு, பக்தா்கள் உணவு படைத்து வழிபாடு நடத்தினா். பின்னா், புதன்கிழமை கோயிலில் பூஜைகள் முடிந்ததும், பெண்கள் முளைப்பாரிகளை சுமந்து ஊா்வலமாகச் சென்று கண்மாயில் கரைத்து, சூரிய பகவானை வணங்கினா்.