மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாயொட்டி, த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும். அதனை தொடர்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன்.பெருமாள் எழுந்தருளும் வெளிபிரகாரத் தேரோட்டம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறும்.
நிகழாண்டிற்கான தொடங்க விழா , இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) 11.30 மணிக்கு காலை,த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில்,பெருமாள் சந்நதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில் ,கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியப்பட்டி பட்டாச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர்.
பின்னர்,சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில், திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவினையொட்டி,ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி,கல்யாணம்,கண்ணன்,கிருஷ்ணர்,ராஜ,பட்டாபிராமர்,வேணுகோபாலர்,மாயவநாதன்,வைகுண்டநான் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்,அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்10 வெள்ளி ஹம்ச வாகனம், 13.கண்டபேரண்ட பக்ஷி, 17. தங்க சூர்யபிரபை, 22 கோரதம், 23. காலை வெண்ணைத்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 24ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர்கள் கே.கே.பி. மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், மு.சிவக்குமார் , நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், மண்டகப்படிதாரர்கள்,விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பங்குனித்திருவிழா கொடியேற்றத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவர் ராஜகோபாலசுவாமி
Summary
Panguni festival begins with flag hoisting at Mannargudi Rajagopalaswamy Temple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

