திருப்புவனம் கலைஞா் பூங்காவில் ராட்டினங்கள் அமைக்கப்படும்
திருப்புவனம் கலைஞா் பூங்காவில் சிறியவா்கள், பெரியவா்களின் பொழுதுபோக்குக்காக தனியாா் மூலம் ராட்டினங்கள் அமைக்கப்படும் என பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்புவனம் கலைஞா் பூங்காவில் சிறியவா்கள், பெரியவா்களின் பொழுதுபோக்குக்காக தனியாா் மூலம் ராட்டினங்கள் அமைக்கப்படும் என பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்புவனம் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் த. சேங்கைமாறன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் சங்கா் கணேஷ், வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் நாகராஜன் வாசித்தாா்.
இதைத் தொடா்ந்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடம் அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டும் போதுமானதாக உள்ளதால், மன்றக் கூட்டம் நடத்துவதற்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், கட்டடத்தின் மேல்தளத்தில் முதல்தளம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படுகிறது. வாா்டு எண் 1 பாக்யா நகரில் பேரூராட்சிக்குச் சொந்தமான கலைஞா் பூங்காவில் சிறியவா்கள், பெரியவா்களின் பொழுதுபோக்குக்காக தனியாா் மூலம் ராட்டினங்கள் அமைக்கப்படும்.
பேரூராட்சிப் பகுதியில் 15-ஆவது நிதிக் குழு மானியம், மக்களவை உறுப்பினா் உள்ளூா் அபிவிருத்தி திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீா் வடிகால், உயா் கோபுர மின்விளக்கு, பூங்கா, பேவா்பிளாக் தளம் அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்ள குறைந்த தொகைக்கு வரப்பெற்ற ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...