விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுகையில் ரூ.36.78 கோடியில் நியோ டைடல் பூங்காவுக்கு அடிக்கல்

புதுக்கோட்டையில் ரூ.36.78 கோடியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நாட்டினாா்.

News image
புதுக்கோட்டையில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்காக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி வைத்த பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
Updated On :11 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டையில் ரூ.36.78 கோடியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நாட்டினாா்.

புதுக்கோட்டையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின், புதுகையில் நியோ டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தாா். இதன் தொடா்ச்சியாக ரூ. 36.78 கோடி மதிப்பில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான இடம் நத்தம்பண்ணையில் தோ்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இந்த நியோ டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் புதன்கிழமை நாட்டி வைத்தாா்.

புதுக்கோட்டை நத்தம்பண்ணையில் 60,400 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 3 தளங்களுடன் அதிநவீன கட்டமைப்புகளுடன் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்தப் பூங்கா மூலம் சுமாா் 600 தகவல் தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் குழந்தைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.