வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் - அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும் மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டைடல் பூங்கா திறக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”திராவிட மாடல் ஆட்சியில் 2 டைடல் பூங்கா மற்றும் 16 நியோ டைடல் பூங்காக்கள் உருவானது.
கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள்.
கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர்.
நமது ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டையல் பூங்காக்களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.
இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைடல் பூங்காக்களும், திருவண்ணாமலை, ராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் - அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Chief Minister Stalin has said that we will spread development, advance all districts and people from all walks of life, and make the great Tamil dream possible.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்! உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை!

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி...

பிரதமரிடம் முதல்வர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முழு விவரம்!

மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




