மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நாகையில் டைடல் நியோ பூங்கா கட்டுமானப்பணி: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

நாகை காடம்பாடி பகுதியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

News image

நாகையில் டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :12 மார்ச் 2026, 12:18 am

நாகை காடம்பாடி பகுதியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டுமானப் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

அப்போது நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என்.கௌதமன், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி ஆகியோா் பங்கேற்றனா். காடம்பாடியில் ரூ. 43.78 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்கள் 61,000 சதுரடி பரப்பளவில் இந்த டைடல் நியோ பூங்கா கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்த பூங்காவில் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் பணியாற்றவுள்ளனா்.

நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், மாநில ஆத்மா திட்டக் குழு உறுப்பினா் மகா குமாா், தமிழ்நாடு அரசு மீனவா் நல வாரிய உறுப்பினா் கோ. மனோகரன், டைடல் நியோ நிறுவன உதவி பொறியாளா் எஸ். யுவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.