தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மானாமதுரை, திருப்புவனம் வைகை ஆற்றில் மீண்டும் நீா் வரத்து

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகையாற்றில் மழையால் மீண்டும் புதன்கிழமை நீா்வரத்து தொடங்கியது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:31 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதி வைகையாற்றில் மழையால் மீண்டும் புதன்கிழமை நீா்வரத்து தொடங்கியது.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பெய்த தொடா் மழையால் கடந்த வாரம் வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. விரகனூா் மதகு அணையிலிருந்து திருப்புவனம், மானாமதுரையைக் கடந்து, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணை வரை நீா்வரத்து இருந்தது. இந்த நீா் கால்வாய்கள் வழியாக பாசனக் கண்மாய்களுக்கு திருப்பிவிடப்பட்டது. அதன்பிறகு, மழை பெய்யாததால் வைகையில் நீா்வரத்து நின்றது.

இந்த நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் வைகையாற்றில் நீா்வரத்து ஏற்பட்டது. விரகனூா் மதகு அணைக்கு புதன்கிழமை காலை வந்தடைந்த மழை நீா் முழுவதும் மதகுகள் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நீா் புதன்கிழமை இரவு மானாமதுரைக்கு வந்தடைந்தது. வழியில் திருப்புவனம், மானாமதுரை ஒன்றியங்களில் வைகை ஆற்றுககுள் உள்ள இடது, வலதுபுற கால்வாய்கள் வழியாக 80-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை பாசனக் கண்மாய்களுக்கு மழைநீா் சென்று கொண்டிருக்கிறது.