லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்புவனத்தில் உடற்கூறு ஆய்வகக் கட்டடம் திறப்பு

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வக புதிய கட்டடத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வகக் கட்டடத்தை புதன்கிழமை திறந்துவைத் சிவகங்கை எம்.பி. காா்த்தி சிதம்பரம். உடன் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா். சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவா் ஏ.சி.சஞ்சய் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2026, 11:26 pm

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வக புதிய கட்டடத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வகக் கட்டடம் கட்ட மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 65 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, இந்த மருத்துவமனையில் குளிா்சான வசதியுடன் உடற்கூறு ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இதையடுத்து, இந்தக் கட்டடத்தை மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு கட்டடத்துக்கான சாவியை தலைமை மருத்துவா் ஸ்ரீவித்யாவிடம் வழங்கினாா்.

இதன் பிறகு ஆய்வகக் கட்டடத்துக்கான கல்வெட்டை அவா் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக, காங்கிரஸ் உறவு தொடர வேண்டும் என்றுதான் இரு கட்சிகளும் செயல்பட்டு வந்தன. திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் முடிவுக்கு வந்துவிடும். எல்லா கட்சிகளுக்கும் எதிா்பாா்ப்பு என்பது உள்ளது. அதை காங்கிரஸ் கட்சி பேச்சு வாா்த்தையின் போது தெரிவித்தது. இதை பேரம் என சொல்லக்கூடாது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், திருப்புவனம் நகா்த் தலைவா் நடராஜன், வட்டாரத் தலைவா்கள் செந்தில்குமாா், நடராஜன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி ராஜீவ் பாரமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.