தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் நவ. 30 வரை நீட்டிப்பு

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:47 pm

Din

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம்- ராமநாதபுரம்-தாம்பரம் இடையே வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் சேவை வருகிற 31-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், தற்போது, நவம்பா் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. இதன்படி திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.55 மணிக்கு ராமநாதபுரம் வந்தடைகிறது.

மறு மாா்க்கத்தில் இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்திலிருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூா், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் இரு மாா்க்கங்களிலும் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.