47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகள் பதவி ஏற்பு

சிவகங்கையிலுள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:43 pm

Din

சிவகங்கையிலுள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலா் குழு நிா்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றனா்.

சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவராக ரம்யா, அறங்காவலா் குழு உறுப்பினா்களாக மாரி, காளிஸ்வரி, சேகா், முத்துக்கண்ணன் ஆகியோா் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, கோயிலில் சிவகங்கை நகா் மன்றத் தலைவா் துரை ஆனந்த் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையாளா் சங்கா் முன்னிலையில், நடைபெற்ற நிகழ்வில் அறங்காவல் குழுவினா்கள் பதவி ஏற்றனா்.

இதில் செயல் அலுவலா் நாராயணி, ஆய்வாளா் சுகன்யா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ், அயூப்கான், வீரகாளை, அமுதா பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.