47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்குடி கடைவீதிகளில் அலைமோதிய பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, பொருள்கள் வாங்க புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:49 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, பொருள்கள் வாங்க புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

காரைக்குடி புதிய பேருந்துநிலையம், நூறடிச்சாலை, செக்காலைச் சாலை, ஐந்துவிளக்கு, கல்லுக்கட்டி, கோவிலூா் சாலை, வ.உ.சி சாலை என பல்வேறு பகுதிகளிலும் சாலையோரத்தில் பல் பொருள்களை வைத்து சிறு வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டனா். மேலும் பெரிய கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக பகலில் சில நேரங்களிலும், மாலை நேரங்களிலும் மழை பெய்ததால் மக்கள் நடமாட்டம் கடைவீதிகளில் குறைவாகக் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. ஆங்காங்கே போலீஸாா் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.