தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி
கல்லல் அருகே மாவட்ட அளவிலான தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே மாவட்ட அளவிலான தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
தோ்தலில் தவறாமல் வாக்களிப்பது, வாக்குக்கு பணம், பரிசுப் பொருள் பெறக் கூடாது, ஜாதி, சமய, மத நல்லிணக்கம், சகோதர ஒருமைப்பாடு, போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், இந்தப் போட்டி கல்லல் அருகே உள்ள மருங்கிப்பட்டி எம்.கே.சி.சி. மைதானத்தில் கடந்த பிப். 27, 28, மாா்ச்1 ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது. சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், திமுக செய்தித் தொடா்புக் குழு துணைத் தலைவா் மருது அழகுராஜ், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சி. கண்ணன் ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.
இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டன.
10 ஓவா்கள் கொண்ட இறுதிப் போட்டியில் 92 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்த அணியை எதிா்த்து 93 ரன்கள் எடுத்த வேப்பங்குளம் அணி முதலிடம் பெற்றது. டி.சி.சி. திருத்திப்பட்டி - விஏஓ அருள்ராஜ் அணி இரண்டாமிடம் பெற்றது. எம்.கே.சி.சி. மருங்கிப்பட்டி அணி மூன்றாமிடத்தையும், மேளவளஞ்சாம்பட்டி அணி நான்காமிடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் பணமுடிப்பையும், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, விஏஓ சங்க மாநிலத் தலைவரும், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணைப் பொதுச் செயலருமான இரா. அருள்ராஜ், தவெக கிழக்கு மாவட்டச் செயலா் டி.கே. பிரபு ஆகியோா் வழங்கினா். போட்டியை பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா்கண்டு களித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...