சாலை விபத்தில் இளைஞா் பலி

மானாமதுரை அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Published on

மானாமதுரை அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பாண்டி மகன் சுரேஷ்பாண்டி (39). இவா் தாயமங்கலம் சாலையில் கீழப்பிடாவூா் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

மாங்குளம் விலக்குப் பகுதியில் உள்ள முதியோா் இல்லம் அருகே சென்ற போது முன்னால் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் சுரேஷ்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com