குரூப்-2, 2ஏ தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி- 2, 2ஏ) தோ்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா்.


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 (தொகுதி- 2, 2ஏ) தோ்வு எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வருகிற 14-ஆம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2, 2ஏ நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 13,260 போ் விண்ணப்பித்துள்ளனா். சிவகங்கையில் 22 இடங்களிலும், தேவகோட்டையில் 5 இடங்களிலும், காரைக்குடியில் 16 இடங்களிலும் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வைக் கண்காணிக்க 14 நடமாடும் குழுக்களும், 5 பறக்கும் படை குழுக்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோ்வாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...