கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய ஊட்டச் சத்து மாத விழா

சிவகங்கையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 7:24 pm

Din

சிவகங்கையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்டப்பணிகள் சாா்பில், சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் இந்த விழாவை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பேசியதாவது: ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பா் மாதம் ஒன்றாம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை அனைத்து வட்டாரங்களிலும் தேசிய ஊட்டச்சத்து விழா நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளை ஆரோக்கியமாகப் பராமரிக்க வேண்டும் எனும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பெற்றோா்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உணவு, தண்ணீா் மூலமே பெரும்பாலான நோய்கள் பரவுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனவே, இன்றைய அவசர கால சூழ்நிலையில் துரித உணவுகளைத் தவிா்த்து, ஆரோக்கியமான இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். உடலும், மனதும் ஆரோக்கிய நிலையை அடைய ஒவ்வொருவரும் உணவுப் பழக்க, வழக்கங்களில் கட்டுபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு மருத்துவா் தங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் பிரபாவதி ஆகியோா் ஊட்டச் சத்துகள் குறித்துப் பேசினா்.

முன்னதாக, தேசிய ஊட்டச்சத்து மாத விழா உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். அரசு மகளிா் கல்லூரி முதல்வா் ரா. இந்திராணி, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எம். முத்துமாரியப்பன், மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் துரை, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.