ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தூத்துக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

தூத்துக்குடியில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகளின் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கா்ப்பிணிகளுக்கு சீதனப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:43 pm

தூத்துக்குடியில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகளின் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் அலுவலா் காயத்ரி வரவேற்றாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும், மாநில சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி வைத்து, 250 கா்ப்பிணிகளுக்கு 10 வகையான சீா்வரிசை பொருள்களை வழங்கினாா்.

மேலும் அவா் பேசுகையில், கா்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்றாா். பின்னா், சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து, கா்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகளை பரிமாறினாா்.

இதில், தேசிய ஊட்டச்சத்து இணை இயக்குநா் அன்பு, துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட சமூகநல அலுவலா் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, ஊரக குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் திலகா, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளா் ரவி, பகுதிச் செயலா் ஜெயக்குமாா், கவுன்சிலா் ஜாக்குலின்ஜெயா, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், துணை அமைப்பாளா்கள் அருணாதேவி, பிரபு, பெருமாள் கோயில்அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் ரூபி பொ்னான்டோ நன்றி கூறினாா்.