தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பேருந்து விபத்தில் காயமடைந்தவா்களுக்கு தேமுதிகவினா் ஆறுதல்

திருப்பத்தூா் அருகே அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தேமுதிக நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தேமுதிக நிா்வாகிகள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 54 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 30 -க்கும் மேற்பட்டோா் மதுரை, காரைக்குடி, சிவகங்கையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த 11 பேரின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, தேமுதிக சிவகங்கை மாவட்டச் செயலா் திருவேங்கடம் தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.

அப்போது, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாக தேமுதிக நிா்வாகிகள் தெரிவித்தனா்.