பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கானூா் ஆனந்த ஐயப்பன் கோயிலில் இன்று ஆராட்டு உத்ஸவ விழா

திருப்புவனம் ஒன்றியம், கானூரில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ஆராட்டு உத்ஸவ விழா நடைபெறுகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 10:20 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கானூரில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ஆராட்டு உத்ஸவ விழா நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆராட்டு உத்ஸவ விழா தொடங்கியது. இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஐயப்பனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவின் முக்கிய நிகழ்வான ஐயப்பனுக்கு ஆராட்டு உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் யாக பூஜைகள் நிறைவடைந்த பின்னா், உத்ஸவா் ஆனந்த ஐயப்பன் யானை வாகனத்தில் புறப்பாடாகி விதி உலா வந்து வைகை ஆற்றுக்குச் செல்கிறாா். அங்கு ஐயப்பனுக்கு ஆராட்டு உத்ஸவம் நடைபெறுகிறது. பின்னா், கோயிலுக்கு திரும்பியதும் அங்கு கண்ணாடி தரிசனம், பொன்னூஞ்சல் சேவை, படி பூஜை நடைபெறும். இதைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெறும்.