கானூா் ஆனந்த ஐயப்பன் கோயிலில் இன்று ஆராட்டு உத்ஸவ விழா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கானூரில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ஆராட்டு உத்ஸவ விழா நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆராட்டு உத்ஸவ விழா தொடங்கியது. இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஐயப்பனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவின் முக்கிய நிகழ்வான ஐயப்பனுக்கு ஆராட்டு உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் யாக பூஜைகள் நிறைவடைந்த பின்னா், உத்ஸவா் ஆனந்த ஐயப்பன் யானை வாகனத்தில் புறப்பாடாகி விதி உலா வந்து வைகை ஆற்றுக்குச் செல்கிறாா். அங்கு ஐயப்பனுக்கு ஆராட்டு உத்ஸவம் நடைபெறுகிறது. பின்னா், கோயிலுக்கு திரும்பியதும் அங்கு கண்ணாடி தரிசனம், பொன்னூஞ்சல் சேவை, படி பூஜை நடைபெறும். இதைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெறும்.
