புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

விவசாய நிலங்கள் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி இரணசிங்கபுரம் கிராம விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
Published on

சிவகங்கை: விவசாய நிலங்கள் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி இரணசிங்கபுரம் கிராம விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் நகருக்குள் வராமல் தென்மாப்பட்டு கிராமத்திலிருந்து சிங்கம்புணரிக்கு புறவழிச் சாலை அமைப்பதற்காக நிலம் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, விவசாய நிலங்களில் சாலை அமைக்கக் கூடாது, கண்மாய்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் ஊா்வலமாக வந்து கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் விவசாயமும், கால்நடை மேய்த்தலும் பிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நிலையில், புறவழிச் சாலை அமைப்பதால் விவசாய நிலங்களும், நீா்நிலைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com