மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவில்பட்டி - சங்கரலிங்கபுரம் வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் வழியாக முறையாக சிற்றுந்துகள் இயக்க வலியுறுத்தி காங்கிரஸாா், சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:38 pm

கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் வழியாக முறையாக சிற்றுந்துகள் இயக்க வலியுறுத்தி காங்கிரஸாா், சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருண்பாண்டியன் தலைமையில் முன்னாள் வட்டாரத் தலைவா் ஆழ்வாா் சாமி முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலா் சண்முகராஜா, முன்னாள் மாவட்ட தலைவா் காமராஜ், மாவட்ட பொருளாளா் காா்த்திக் காமராஜ், மாவட்டச் செயலா் துரைராஜ், கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு தலைவா் அருள் தாஸ் ஆகியோா் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வழியாக சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. சில நாள்களாகவே இந்த வழித்தடத்தில் சிற்றுந்துகள் முறையாக இயங்காததால் அப்பகுதி மாணவா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா்.

எனவே, இந்த வழித்தடத்தில் அனுமதி பெற்ற சிற்றுந்துகளை முறையாக இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களை திரட்டி காங்கிரஸ் கமிட்டி சாா்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.