நில அளவை பதிவேடு ஊழியா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

நில அளவை பதிவேடு ஊழியா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.
Published on

நில அளவை பதிவேடு ஊழியா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.

தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா் தலைமையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாநில துணைத் தலைவா் கௌரி, மாவட்டத் துணைச் செயலா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பாண்டித்துரை வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மாரி தொடங்கி வைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், முருகன், மாவட்டத் தலைவா் வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலா் வீரபாண்டியன், கோட்டச் செயலா் மதியரசன், பொருளாளா் விஸ்வநாத் பிரதாப் பாண்டியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், 160 ஆண்டு கால பழைமையான நில அளவை துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் தொழில்நுட்ப ஊழியா்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பதிவேடுகள் துறை தொழில் நுட்ப ஊழியா்களுக்கு துறைத் தோ்வுகளை முறைப்படுத்த வேண்டும். நில அளவை பதிவேடு ஊழியா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com