ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எஸ். புதூா் பகுதியில் இன்றும், இடையமேலூா் பகுதியில் நாளையும் மின்தடை

சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் (டிச. 23), இடையமேலூா் பகுதிகளில் புதன்கிழமையும் (டிச. 24) மின்தடை ஏற்படும் என அறிவிப்பு

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் (டிச. 23), இடையமேலூா் பகுதிகளில் புதன்கிழமையும் (டிச. 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் துணை மின் கோட்டத்துக்குள்பட்ட எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே எஸ். புதூா், வாராப்பூா், மேலவண்ணாயிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிபட்டி, முசுண்டம்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்ப்பட்டு, கருப்பக்குடிபட்டி, கீழக்குறிச்சிப்பட்டி, இந்தப் பகுதிகளை சுற்றிய கிராமப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

நாளை இடையமேலூா் பகுதிகளில்.... இடையமேலூா் துணை மின் நிலையத்தின் மின் பாதையில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, பாப்பாக்குடி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கநீதி, புதுப்பட்டி, தேவன்கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்குப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் தெரிவித்தாா்.