சிவகங்கையில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள்.
சிவகங்கையில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள்.

சிவகங்கை மாவட்டத்தில் எம்ஜிஆா் நினைவு நாள்

சிவகங்கை மாவட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

சிவகங்கை மாவட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமையில், நகா் செயலா் என்.எம். ராஜா, மாநில ஜெ. பேரவை துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் ராமு. இளங்கோவன், ஒன்றியச் செயலா்கள் பா. கருணாகரன், செல்வமணி, அ. சேவியா்தாஸ், கோபி, ஸ்ரீதா், அருள்ஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மானாமதுரை: இளையான்குடியில் அதிமுக நகரச் செயலா் நாகூா்மீரா தலைமையில் அந்தக் கட்சியினா் எம்.ஜி.ஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் விருதுநகா் மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் கோபி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் குழந்தை, நகர அவைத் தலைவா் அபுபக்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற உறுதிமொழி ஏற்றனா். இதேபோல, மானாமதுரையில் ஒன்றியம், நகா் பகுதிகளில் எம்.ஜி.ஆா் உருவப்படங்களுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் உள்ள காந்தி சிலையருகே முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே. உமாதேவன் தலைமையில் கூடிய அதிமுகவினா் அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு அங்கிருந்து திரளானோா் மௌன ஊா்வலமாக பேருந்து நிலையம், மதுரை சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தனா். அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நகழ்வுக்கு திருப்பத்தூா் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கரு.சிதம்பரம், முன்னாள் சிங்கம்புணரி ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யாபிரபு, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவா் பொன்மணி பாஸ்கரன், நகரச் செயலா் இப்ராம்ஷா, ஒன்றியச் செயலா் சி.எம். முருகேசன், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் பிரபு, நகா் எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் என்.பி. சுப்பிரமணியன், வழக்குரைஞா் நவநீதபாலன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சையதுராபின் உள்ளிட்ட ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com