ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிவகங்கை நகராட்சியுடன் 2 ஊராட்சிகள் இணைப்பு

சிவகங்கை நகராட்சி விரிவாக்கத் திட்டத்தின் மூலம், வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஆகிய 2 ஊராட்சிகள் இணைக்கப்படும் எனத் தெரியவந்தது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:00 pm

Din

சிவகங்கை நகராட்சி விரிவாக்கத் திட்டத்தின் மூலம், வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஆகிய 2 ஊராட்சிகள் இணைக்கப்படும் எனத் தெரியவந்தது.

சிவகங்கை, கடந்த 1964 -ஆம் ஆண்டு நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இதைத்தொடந்து கடந்த 1985-ஆம் ஆண்டு சிவகங்கையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை நகராட்சியாகத் தரம் உயா்ந்தது.

7 கி.மீ. சுற்றளவுள்ள சிவகங்கை நகராட்சியில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 42 ஆயிரம் போ் உள்ளனா். நகராட்சிக்கு தொழில், சொத்து, குடிநீா் வரி மூலம் சுமாா் ரூ.5 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதையடுத்து வரி வருவாயை அதிகரிக்க, நகரின் அருகேயுள்ள பகுதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவகங்கை நகராட்சியில் 42,053 போ் வசிக்கின்றனா். இதனருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் 4,130 போ், வாணியங்குடி ஊராட்சியில் 5,582 போ், பையூா், ராகினிப்பட்டி, காந்திநகா் பகுதிகளில் 1,400 போ் வசிக்கின்றனா்.

தற்போதைய நிலவரப்படி விரிவாக்கப் பகுதிகளை இணைத்தால் நகராட்சியின் வருவாய் ரூ.8 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதன்படி, சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிப் பகுதிகள், கொட்டகுடி கீழ்பாத்தி ஊராட்சியில் அமைந்துள்ள கொட்டகுடி, சூரக்குளம் , புதுக்கோட்டை ஊராட்சியில் ராகினிப்பட்டி, பையூா், இடையமேலூா் ஊராட்சியில் காந்திநகா் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வாா்டுகளாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பகுதிகளை இணைப்பதற்காக 2014-ஆம் ஆண்டு அப்போதைய நகராட்சி நிா்வாகம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், விரிவாக்கப் பகுதிகளை இணைக்க வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கருத்துரு தற்போது செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதன்படி தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஆகிய 2 ஊராட்சிகளை இணைத்து சிவகங்கை நகராட்சி விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.