சிவகங்கை வாணியங்குடி பகுதியில் பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகளில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
சிவகங்கை வாணியங்குடி பகுதியில் பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகளில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

மினி லாரியில் கொண்டு சென்ற வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன!

சிவகங்கை வாணியங்குடி பகுதியில் மினி லாரியில் ஏற்றிச் சென்ற வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பற்றியதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது
Published on

சிவகங்கை வாணியங்குடி பகுதியில் மினி லாரியில் ஏற்றிச் சென்ற வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பற்றியதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கை வாணியங்குடி பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (39). இவா் வியாழக்கிழமை பிற்பகலில் சிவகங்கையை அடுத்த பில்லூா் கிராமத்திலிருந்து மினி லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு வந்தாா்.

சிவகங்கை வாணியங்குடி மருதப்ப ஊருணி பகுதியில் வரும்போது அந்தப் பகுதியில் மேலே சென்ற மின்சார கம்பி வைக்கோல் மீது உரசியதால் தீப்பிடித்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் லாரியிலிருந்த வைக்கோல் கட்டுகளை நீளமான கம்புகளின் உதவியால் விரைவாக கீழே தள்ளி விட்டனா்.

பின்னா் லாரியை அந்தப் பகுதியிலிருந்து எடுத்துச் சென்றனா். கீழே விழுந்த வைக்கோல் கட்டுகள் வேகமாக தீப்பிடித்து எரிந்தன. இதைத்தொடா்ந்து, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினா் வைக்கோல் கட்டுகளில்

தீ பரவாமல் தண்ணீா் ஊற்றி அணைத்தனா். இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் முத்துச்சாமி சிறு காயத்துடன் தப்பினாா். இந்தப் பகுதியில் செல்லும் மின் கம்பிகள் மிகத் தாழ்வாகச் செல்வதாகவும், மின்கம்பங்கள் சேதம் அடைந்ததாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதை சீரமைக்க மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com