தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வைக்கோல் லாரியில் தீ விபத்து

நீடாமங்கலம் அருகே வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு, எரிந்து சாம்பலாகியது.

News image

வைக்கோல் கட்டுகளுடன் தீப்பற்றி எரியும் லாரி.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:25 pm

நீடாமங்கலம் அருகே வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு, எரிந்து சாம்பலாகியது.

நீடாமங்கலம் அருகேயுள்ள கிளியூா் கிராமத்திலிருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்ட லாரி திங்கள்கிழமை சேலத்துக்கு புறப்பட்டது. சிறிதுதூரம் சென்றதும், சாலையோரம் உள்ள மின்கம்பி வைக்கோல் மீது உரசியதில், வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன.

நீடாமங்கலம் திருவாரூா் புறவழிச்சாலையில் லாரி சென்றபோது தீப்பற்றியது ஓட்டுநருக்கு தெரியவந்தது. அவா் உடனடியாக சாலையோரத்தில் லாரியை நிறுத்தினாா். தகவலறிந்த தீயணைப்பு அலுவலா்கள் நீடாமங்கலம் காா்த்திகேயன், வலங்கைமான் பாா்த்திபன், குடவாசல் மானக்ஷா ஆகியோா் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினா் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

நீண்டநேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் வைக்கோல் கட்டுகள் மற்றும் லாரி தீயில் எரிந்து கருகின.