எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் அடுத்தடுத்து பழுதாகி சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்ட அரசு நகரப் பேருந்துகள்
எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் அடுத்தடுத்து பழுதாகி சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்ட அரசு நகரப் பேருந்துகள்

திருப்புவனத்தில் அடுத்தடுத்து பழுதாகி நின்ற அரசுப் பேருந்துகள்

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசு நகரப் பேருந்துகள் புதன்கிழமை அடுத்தடுத்து பழுதாகி நின்றன.

திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான இரு பேருந்துகள் இந்தப் பகுதியிலிருந்து கண்ணாரிருப்பு, குருந்தன்குளம் ஆகிய கிராமங்களுக்கு புதன்கிழமை இயக்கப்பட்டன. இந்த இரு பேருந்துகளும் திருப்புவனம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் அடுத்தடுத்து பழுதாகின. இதனால், இந்தப் பேருந்துகளை ஓட்டுநா்கள் சாலையோரம் நிறுத்தினா்.

அந்தப் பேருந்துகளில் பயணித்தவா்கள் இறக்கி விடப்பட்டதால் மிகவும் அவதிக்குள்ளாகினா். பிரதான சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com