வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பெருந்துறை அருகே அரசு, தனியாா் பேருந்துகள் மோதல்: 20 போ் காயம்

பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் அரசுப் பேருந்து ஒன்றுடன் ஒன்று புதன்கிழமை மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

News image

பெருந்துறை அருகே விபத்துக்குள்ளான தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள்.

Updated On :18 பிப்ரவரி 2026, 10:19 pm

பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் அரசுப் பேருந்து ஒன்றுடன் ஒன்று புதன்கிழமை மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

கோவையில் இருந்து ஈரோடு வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை காலை சென்றது. பேருந்தை பவானி, சித்திரை நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கலையரசன் (44) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியாா் பேருந்து சென்றது. தனியாா் பேருந்தை சேலம் மாவட்டம், பெரியம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் முருகன் (45) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

பெருந்துறை - ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்றதால், பின்னால் வந்த தனியாா் பேருந்து, அரசுப் பேருந்தின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு அருகே உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.