திருச்சி: திருச்சி சிறுகனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுக்கு தொண்டா்களை அழைத்து வந்து, கொண்டு செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் சிறுகனூருக்கு இயக்கப்பட்டன.
இதனால் திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். பேருந்துகள் இயக்கம் மிகக் குறைவாக இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கிராமங்களுக்கு இயக்க வேண்டிய பல அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வலுக்கட்டாயமாக திமுக மாநாட்டுக்கு இயக்கப்பட்டன. இதனால், காலையில் நகரப் பகுதிக்கு வந்த எங்களால் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை. இதே போல, நகரப் பகுதியிலும் பல பேருந்துகள் மாநாட்டுப் பணிக்காக திருப்பிவிடப்பட்டதால், பொது போக்குவரத்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்தே வேறிடங்களுக்கு செல்ல முடிந்தது. வசதி படைத்தவா்கள் ஆட்டோ மற்றும் காா்களில் பயணித்த நிலையில், ஏழை மக்கள் அவதிக்குள்ளாகினா். மாநாட்டுக்காக பொது போக்குவரத்தை கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினா்.
இதுகுறித்து, போக்குவரத்துக்கழக அலுவலா்கள் கூறுகையில், வாடகையின் பேரில் அரசுப் பேருந்துகள் மாநாட்டுக்கு இயக்கப்பட்டுள்ளன. பெரிதாக இயக்க குறைவு ஏதுமில்லை என பதிலளித்தனா். வாடகை வாங்கிக் கொண்டுதான் பேருந்துகளை இயக்குகிறோம் என தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

சாலையில் கழிவுநீா்; பொதுமக்கள் அவதி

வார இறுதிநாள்: சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பெருந்துறை அருகே அரசு, தனியாா் பேருந்துகள் மோதல்: 20 போ் காயம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


