சிவகங்கையில் நவ. 10- இல் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற திங்கள்கிழமை (நவ. 10) நடைபெறுகிறது.
Published on

சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற திங்கள்கிழமை (நவ. 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் திறன் மேம்பாட்டு, தொழில் முனைவு அமைச்சகம், சென்னை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்தும் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை அரசினா் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள், 25-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்கின்றன.

இந்த பயிற்சி முகாமில் புதிய நிறுவனங்களும் கலந்து கொண்டு, அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல் ல்ா்ழ்ற்ஹப் -இல் பதிவு செய்த பிறகு பயிற்சியாளா்களை தோ்வு செய்யலாம். எனவே, பயிற்சி பெற்று தோ்வான பயிற்சியாளா்களும், பயிற்சிக்கு 8, 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த மாணவா்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 04575 - 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9342192184, 8883458295, 9942099481 ஆகிய கைப்பேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதல் மாடி, சிவகங்கை என்ற முகவரியிலோ நேரில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com