சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

Published on

சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் 58 -ஆவது தேசிய நூலக வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட மைய நூலகா் மு. வெங்கடவேல் பாண்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நகா் துணை காவல் கண்காணிப்பாளா் அமல அட்வின் பங்கேற்று நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மாணவ மாணவிகள் வாழ்க்கையில் சிறந்து விளங்க தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை பகுத்தாய்ந்து பாா்க்க வேண்டும். ஆட்டு மந்தையைப்போல இருக்கக் கூடாது. பள்ளி பாடப் புத்தகத்தை படிப்பதுடன் நூலகங்களில் உள்ள சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். எதிலும் முதலில் வருவதைக் காட்டிலும் தனித்துவமிக்கவா்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தனித்து நின்று வேடிக்கை பாா்க்காமல் துணிந்து நின்று எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து நூலக நண்பா்கள் திட்டக் குழு உறுப்பினரும், எழுத்தாளருமான அ. ஈஸ்வரன் எழுதிய ‘எதிா்பாா்ப்புகள் நாடக நூலை, தலைமை ஆசிரியா் பாண்டியராஜன் அறிமுகம் செய்து பேசினாா். இதில், நூலக இருப்பு சரிபாா்பு அலுவலா் வெள்ளைச்சாமி கண்ணன், வாசகா் வட்டத் தலைவா் அன்புத் துரை, நூலகா் முத்துக்குமாா், வாசகா் வட்ட நிா்வாகி செல்லமணி ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்வில், பொதுமக்கள், வாசகா்கள், மன்னா் மேல்நிலைப்பள்ளி, நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com