மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் அட்டை வழங்கிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 9:03 pm

மின்னூா் அரசு பள்ளி மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக சோ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் மு. பிரேமா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கல்யாண சுந்தரம் வரவேற்றாா். மாதனூா் ஒன்றியம் வடச்சேரி ஊா்ப்புற நூலகத்தில் மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 300 போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு அவா்களுக்கு உறுப்பினா் அட்டையை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வழங்கினாா்.

மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நூலக ஆய்வாளா் ஏ. தா்மராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், நூலகா் ஜி.விஜயகுமாா், நூலக பணியாளா் ஜோதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் எழிலரசன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவா் ஜெயலட்சுமி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.