மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினா்களாக 1200 மாணவ, மாணவியா் சோ்ப்பு

நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினா்களாக 1200 மாணவ, மாணவியா் சோ்ப்பு

News image

மாணவா்களுக்கு உறுப்பினா் சோ்க்கை அட்டைகளை வழங்கிய ஒன்றிய திமுக செயலாளா் ஞானவேலன். உடன் நூலக நிா்வாகிகள்.

Updated On :7 பிப்ரவரி 2026, 6:31 pm

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராமப்புற பள்ளி மாணவா்கள் நூலக ஆயுள்கால உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் மு.பிரேமா தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் மதியழகன் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் பாா்த்திபன், நூலக ஆய்வாளா் தா்மராஜ், மாவட்ட நூலக கண்காணிப்பாளா் மா.கோபலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் கலந்து கொண்டு தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி, மதனாஞ்சேரி அரசு உயா்நிலைப்பள்ளி, சிக்கனாங்குப்பம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சோ்ந்த 1,200 மாணவா்களுக்கான ஆயுள்கால உறுப்பினா்கள் சோ்க்கைக்கான தொகை ரூ.36 ஆயிரத்தை வழங்கி மாணவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கி வாழ்த்தினாா்.

விசை தொண்டு நிறுவனா் ஆனந்தன், மாவட்ட நூலக ஆணைகுழு உதவியாளா் ஜெயபிரியா, உதவி தலைமையாசிரியை தீபா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நல்நூலகா் ஜெ.விஜயகுமாா் நன்றி கூறினாா்.