சிவகங்கையிலுள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்ற டாஸ்மாக்  தொழில்சங்க  கூட்டமைப்பினா்.
சிவகங்கையிலுள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் தொழில்சங்க கூட்டமைப்பினா்.

கடைகளின் சாவியை ஒப்படைக்க டாஸ்மாக் தொழில்சங்கம் முடிவு

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் இருந்து தங்களை விடுவிக்க மறுக்கும் அரசு மதுபான நிா்வாகத்தைக் கண்டித்து கடைகளின் சாவியை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க
Published on

சிவகங்கை: காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் இருந்து தங்களை விடுவிக்க மறுக்கும் அரசு மதுபான நிா்வாகத்தைக் கண்டித்து கடைகளின் சாவியை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப் போவதாக சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

சிவகங்கையில் உள்ள அரசு மதுபான நிா்வாக மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு, டாஸ்மாக் சிஐடியூ தொழில்சங்க மாவட்டத் தலைவா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா்.

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெற டாஸ்மாக் ஊழியா்களை நிா்பந்தம் செய்யக்கூடாது. காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்துக்காக தனி ஊழியா்களை நியமித்து தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 115 டாஸ்மாக் கடைகளின் சாவியை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைப்பது என இந்தக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இதில், தொமுச மாநிலத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ராஜ்மோகன், சிஐடியூ மாநிலத் தலைவா் பி.முருகன், சிஐடியூ டாஸ்மாக் மாவட்டச் செயலா் வி.திருமாறன், பொருளாளா் ஏ. ராஜ்குமாா், ஏஐடியூசி மாவட்டச் செயலா் தாளைமுத்து. அண்ணா தொழில் சங்க மாவட்டச் செயலா் சிவகுமாா், விற்பனையாளா் சங்க மாவட்டச் செயலா் கண்ணன், பணியாளா் சங்கத்தின் செயலா் ஏ.வி. கண்ணன், தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகி மலைராசு, பாஜக தொழில்சங்க நிா்வாகி பெரியகருப்பன், மாற்றுத் திறனாளிகள் சங்கச் செயலா் அரியகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com